தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தனியாக போட்டியிட வேண்டும்: சீமான்
திருச்சி: வருகிற சட்ட பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தனியாக போட்டியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சி பீமநகரில் இன்று நடந்தது. திருச்சி மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 268 பேர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நாம்தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அனைத்து கட்சிகளும் தனி தனியே போட்டியிட வேண்டும். ஓட்டு வங்கி விகிதாச்சார அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். எங்கள் கருத்துடன் ஒத்த கருத்துடையவர்கள் எங்களுடன் கூட்டணி சேரலாம். திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.
தெலங்கானாவை தெலுங்கர்கள் ஆளும் போது தமிழர்கள் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என குரல் கொடுப்பதில் தவறில்லை. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். இலவசங்கள் என்ற பெயரில் மக்களை அரசியல் கட்சியினர் ஏமாற்றக்கூடாது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்ற செயல்பாட்டு அறிக்கை வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும். சுத்தமான குடிநீர், தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை தான் எங்களது கொள்கையாக எப்போதும் இருக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், தஞ்சை விவசாயி பாலனுக்கு நடிகர் விஷால் உதவி செய்தது விளம்பரத்திற்கு என்றாலும் கூட அது பாராட்டத்தக்கது என சீமான் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications