இன்னும் 6 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியல் – சீமான் அதிரடி அறிவிப்பு
திருச்சி: சட்ட மன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை இன்னும் 6 மாதத்தில் வெளியிடுவேன் என்று அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு ஞாயிற்றுக்கிழைமை மாலை நடைபெற்றது.

இம் மாநாட்டில் சீமான் பேசியதாவது:
இதுவரை சாதி, மத உணர்வுகளோடு கூடிய மக்கள் முதன்முதலாக இன உணர்வுடன் இங்கு கூடியுள்ளனர். மாற்று அரசியல் புரட்சியை முன்வைக்கிறோம்.
ஈழம் விடுதலை ஒன்று தான் வாழ்நாள் இலக்கு. தமிழ் தேசிய இனத்திற்கு என ஒரு தேசம். அதனை அடைவதற்கான தொடக்கம் தான் 2016 தேர்தல். தமிழர்களுக்கு என்று அதிகாரம் இல்லை. அதனால் தான் அன்டை நாட்டில் நமது மீனவர்கள், அன்டை மாநிலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
இலங்கையில் நடந்த இனஅழிப்பை திமுக, அதிமுக தடுக்கவில்லை. தமிழர்களை காக்கவில்லை.
தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆள்மாற்றம் நடக்கிறது. ஆட்சி மாற்றம் நடக்கவில்லை. ஊழல், லஞ்சம், பலாத்காரம், கொலை, கொள்ளை, தனியார் மயம், இவைகள் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என எல்லா அரசுகளுக்கும் பொதுவானது.
எனவே தான் தனித்து நிற்க முடிவேடுத்தோம். தேசிய அரசியல் கட்சிகளுடனும், திராவிட அரசியல் கட்சிகளுடனும் ஒருபோதும் கூட்டணி கிடையாது.
சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது திட்டமிட்ட இன படுகொலை நடத்தியது. இதனை கண்டித்து அதிமுக அரசு சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்.
தனி ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தனி தமிழ் ஈழ சோசலிச குடியரசு அமையவேண்டும். தனி ஈழம் மட்டும் தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்றது.
2016 தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு. 234 தொகுதிகளிலும் நமது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அவர்களுடைய பட்டியல் இன்னும் 6 மாதங்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications