கங்கிராட்ஸ், கங்கிராட்ஸ்: சுந்தர் பிச்சையை வாழ்த்திய மோடி, நாதெல்லா, குக்
சென்னை: கூகுள் நிறுவன சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் பிச்சைக்கு பிரதமர் மோடி, மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா, ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சுந்தர் பிச்சைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.
சுந்தருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
மோடி
வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை. கூகுளில் புதிய பொறுப்பை ஏற்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
டிம் குக்
பதவி உயர்வு பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை என்று ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் ட்விட்டர் மூலம் வாழ்த்தியுள்ளார்.
|
சத்யா நாதெல்லா
வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை. தகுதிக்கேற்ற பதவி என மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
எரிக் ஷ்மிட்
சுந்தரின் திறமையை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்... அவர் சிறந்த சிஇஓவாக இருப்பார் என ஆல்ஃபபெட் நிறுவன எக்சிகியூட்டிவ் சேர்மன் எரிக் ஷ்மிட் கூறியுள்ளார்.
|
சந்திரபாபு நாயுடு
கூகுள் நிறுவன சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள் சுந்தர் பிள்ளை. இந்தியாவுக்கு பெருமையான தருணம் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்தியுள்ளார்.
|
ஜெஃப் வீனர்
கூகுளின் புதிய சிஇஓ சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துக்கள். அந்த பதவிக்கு லாரி உங்களை விட சிறந்த நபரை தேர்வு செய்திருக்க முடியாது என லிங்க்ட்இன் நிறுவன சிஇஓ ஜெஃப் வீனர் வாழ்த்து கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications