திருட்டு மது விற்ற வாலிபருக்கு சராமரி அடி உதை... நாகர்கோவில் அருகே பரபரப்பு
நாகர்கோவில்: திருட்டுத்தனமாக மதுபாட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞர் தாக்கப் பட்டது தொடர்பாக நாகர்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழி பகுதியில் திருட்டித்தனமாக மது பாட்டில்கள் மற்றும் போதை பொருள்கள் விற்கப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் உரிமம் இல்லாமல் மது விற்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து ராமச்சந்திரனைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், தன்னை போலீசில் சிக்க வைத்தது அதே பகுதியை சேர்ந்த அருள், ஜோசப், சுரேஷ், அண்ணாத்துரை ஆகியோர் என கருதினார். எனவே, அவர்களுடன் ராமச்சந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த நான்கு பேரும் சேர்ந்து ராமச்சந்திரனை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் 4 இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருட்டு தனமாக மது விற்பனை செய்த ராமசந்திரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications