நாஞ்சில் சம்பத்துக்கு மீண்டும் கிடைத்தது "மைக்"...!
சென்னை: நாஞ்சில் சம்பத்துக்கு, அதிமுக கூட்டங்களில் பேச தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தத் தடை நீங்கியுள்ளதாம்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் அதிமுக கூட்டங்களில் பேசவுள்ளார். முதலில் ஆவடியிலும், தொடர்ந்து தி.நகரிலும் அவர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களில் பேசவுள்ளார்.

தந்தி டிவிக்குக் கொடுத்த பேட்டியிலும், தொடர்ந்து புதிய தலைமுறைக்குக் கொடுத்த பேட்டியிலும் தெரிவித்த கருத்துக்களுக்காக கடும் கண்டனங்களைச் சம்பாதித்தார் நாஞ்சில் சம்பத். இதையடுத்து அவரிடமிருந்த கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பதவியைப் பிடுங்கினார் ஜெயலலிதா.
மேலும் அவர் அதிமுக கூட்டங்களில் பேசவும் தடை விதிக்கப்பட்டது. அவர் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் நாஞ்சில் சம்பத் அமைதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் அதிமுக கூட்டங்களில் பேச அனுமதி கிடைத்துள்ளதாம். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று ஆவடியில் நடைபெறும் கூட்டத்தில் சம்பத் பேசவுள்ளார். அதேபோல 26ம் தேதி தி.நகரில் நடைபெறும் கூட்டத்திலும் அவர் பேசவுள்ளாராம்.
இருப்பினும் டிவி விவாத நிகழ்ச்சிகளில் மீண்டும் இவர் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications