நாஞ்சில் சம்பத் திமுகவில் இணைகிறாரா?
சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் பரவிய நிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நாஞ்சில் சம்பத் அரசியலை விட்டே வெளியேறப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில், அவர் திமுகவில் இணையப்போவதாக டிவி ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. அதிமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் சசிகலாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

பொதுவாக கட்சி சம்பந்தபட்ட விஷயங்களில் ஊடகங்களுக்கு முந்தி கருத்துச் சொல்லும் நாஞ்சில் சம்பத் இந்த விவகாரத்தில் அமைதி காத்து வருகிறார். இதனால் அரசியலில் இருந்து நாஞ்சில் சம்பத் ஓய்வு பெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து அவரது மகள் மதிவதனி செய்தியாளர்களை சந்தித்து தனது தந்தை அரசியலில் இருந்து விலகுவதாக வரும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நாஞ்சில் சம்பத் திமுகவில் இணையப் போவதாக டிவி ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. மேலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் திமுகவில் இணைவது குறித்து பேசியதாகவும், அதற்காக தேதி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications