சாலையில் குடங்களை போட்ட நரிக்குறவர்கள்.. வாயில் துணிகட்டி தண்ணீர் கேட்டு திருத்தணியில் "ஒப்பாரி"
Recommended Video
திருத்தணி: திருத்தணியில் குடிநீர் கேட்டு வாயில், வயிற்றில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தப்படி நூதன முறையில் சாலை மறியலில் நரிகுறவர்கள் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே தலைவிரித்தாடுகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் லாரிகளில் நீரை விலை கொடுத்து வாங்கி புழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம்
பெரும்பாலான கிராமங்களில் பல கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

குடிநீர் பற்றாக்குறை
இதன் ஒரு பகுதியாக நரிக்குறவர் வசிக்கும் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் சரிவர வருவதில்லை என கூறப்படுகிறது. இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குடி நீர் பற்றாக்குறையை போக்க பலமுறை புகார் கொடுத்துள்ளனர்.

சாலை மறியல்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக கூறி ஆவேசம் அடைந்த அவர்கள் வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு
தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக அவர்களுக்கு டிராக்டர் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications