ஆத்தூர் தொகுதியில் படு தோல்வி அடைவார் நத்தம் விஸ்வநாதன்- நியூஸ் 7 கருத்துக் கணிப்பு
சென்னை: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டசபைத் தொகுதியில் மாநில அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் படு தோல்வி அடைவார் என்று நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
நேற்று மேற்கு மண்டலத்திற்கான கருத்துக் கணிப்பு முடிவுகளை அறிவித்தது நியூஸ் 7- தினமலர். இன்று தெற்கு மண்டலத்துக்கான முடிவுகளை இந்த நிறுவனங்கள் இன்று வெளியிட்டன.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் திமுகவுக்கு 5 தொகுதிகளிலும், அதிமுக
வேடசந்தூர் தொகுதியில் மட்டும் வெல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் இரண்டு கட்சிகளும் சம நிலையில் உள்ளன.
அதிமுகவுக்கு இங்கு கிடைக்கும் மிகப் பெரிய தோல்வியாக ஆத்தூர் உள்ளது. இங்கு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இதை பனிஷ்மென்ட் தொகுதியாக நத்தம் ஆதரவாளர்களே கூறுகின்றனர். இந்த நிலையில் இங்கு மிகப் பெரிய அளவிலான தோல்வியை அதிமுக பெறும் என்று கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.
இங்கு 17 சதவீதம் பேரே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், திமுகவுக்கு கிடைத்துள்ள ஆதரவு 69 சதவீதமாகும். தேமுதிகவுக்கு இங்கு 6.5 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
நத்தம் விஸ்வநாதனுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பது ஏற்கனவே கணிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் இங்கு அவர் படு தோல்வி அடையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications