நவராத்திரி ஆரம்பம்: அம்பிகை வழிபாடும் அதன் சிறப்புக்களும்!!
நவராத்திரி ஆரம்பமாகிவிட்டது....
நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளை குறிக்கும். உலகத்தையும் உலக மக்களையும் காக்கும் பொருட்டு அம்பாள் தீய சக்திகளுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் நாட்கள் நவராத்திரி எனப்படும்.
இந்த ஒன்பது நாட்களும் விபத்துகளும் கண்டங்களும் அதிகமாக இருக்கும். அம்பாளை வழிபடுவதால் அனைத்து தீங்குகளிலிருந்தும் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். முப்பெரும் தேவிகளான அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோரை மூன்று நாட்கள் வீதம் ஒன்பது நாட்கள் வழிபாடு செய்யாப்படுகிறது.

அம்பாளின் அவதாரம்:
உலக நன்மைக்காக ஐந்து முறை அம்பாள் அவதரித்துள்ளாதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. முதலாவாதக மஹாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் போது விஷ்ணுவின் நாபியிலிருந்த பிரம்மவிற்குப் பிரசன்னமாகி அவருக்குத் தெளிவையும், சிருஷ்டிக்கும் வல்லமையையும் கொடுத்தாள்.
இரண்டாவதாக மஹாவிஷ்ணுவின் மூலமாக மோகினியாக அவதாரம் எடுத்தாள்.

தாட்சாயிணி, பார்வதி
மூன்றாவதாக தட்சனின் புதல்வியாக தாட்சாயணி என்னும் பெயருடன் அவதரித்தாள்..
நான்கவதாக சிவபெருமானை திருமணம் புரிவதற்காக பார்வதி தேவியாக அவதாரம் எடுத்தாள்.
ஐந்தாவாதக பண்டாசுரனை அழிப்பதற்காக லலிதாம்பாள் என்னும் திருப்பெயருடன் ஸ்ரீசக்கரம் என்ற ரதத்தில் அவதாரம் எடுத்தாள்.

பூஜை செய்யும் முறை:
நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம். நவராத்திரியில் சுமங்கலிகளையும் 10 வயதிற்குட்பட்ட கன்னிப் பெண்களையும் பூஜித்து வணங்குவது சிறப்பு.

அன்னைக்கு அலங்காரம்
அனைத்து கோவில்களிலும் பொதுவாக பின்வரும் வடிவங்களில் அலங்காரம் செய்யப்படுகிறது துர்கை, பத்திரகாளி, அம்பாள், அன்னபூரணி, பைரவி, சாமுண்டி, லலிதா, பவானி, மூகாம்பிகை ஆகும்.

பூஜைக்குறிய சிறப்பு நாட்கள்
1. நவராத்திரி ஆரம்பம் - புரட்டாசி 09 - 25-09-2014 வியாழன் கிழமை.
2. பத்திரகாளியஷ்டமி - புரட்டாசி 16 - 02-10-2014 வியாழன் கிழமை.
3. சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை புரட்டாசி 16 - 02-10-2014 வியாழன் கிழமை
4. விஜய தசமி - புரட்டாசி 17 - 03-10-2014 வெள்ளி கிழமை

ஆயுதபூஜை
மஹாநவமி எனப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவியின் அருள் வேண்டி தங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றுடன் புதிதாக வாங்கப்பட்ட புத்தகங்களையும் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

வெற்றி தரும் விஜயதசமி
மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் துவங்கினால் அவ்வருடம் முழுவதும் செய் தொழில் வளம் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications