மத்திய அரசு நம்பிக்கை துரோகம்.. ஹைட்ரோகார்பனை எதிர்த்து 2வது நாளாக தீவிரமடைகிறது நெடுவாசல் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறியது. இதனால் நெடுவாசலில் தொடங்கிய போராட்டம் 2வது நாளாக தீவிரமடைந்துள்ளது.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் நேற்று குதித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கக் கூடாது என்று கோரி 22 நாட்களாக நெடுவாசலில் ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கொடுத்த வாக்குறுதியை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கடந்த 27ம் தேதி தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் போர்
இதனால் அதிர்ச்சி அடைந்த நெடுவாசல் மக்கள் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டனர். நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 70 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 8ம் தேதி நடத்திய கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை எதிர்த்து மீண்டும் போராடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.

தொடங்கியது போராட்டம்
இந்த முடிவின் அடிப்படையில், நெடுவாசலில் நேற்று காலை இளைஞர்களும், பெண்களும் போராட்டக்களத்தில் குவிந்தனர். இதையறிந்து சென்ற போலீசார், அவர்களை அங்கிருந்து விரட்டினர். ஆனாலும் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2வது நாள்
நேற்று தொடங்கிய போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் மற்றும் 70 கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் என ஒவ்வொன்றாக தொடர உள்ளனர் நெடுவாசல் கிராம மக்கள்.

பதற்றம்
இதனால் புதுக்கோட்டை நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது. காவல் துறையினர் போராட்டக் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். என்றாலும் பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டக் களத்தில் நின்று உறுதியோடு போராடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications