கிருஷ்ணசாமி உடல் உறவினரிடம் ஒப்படைப்பு.. கேரள ஆம்புலன்சில் தமிழகம் வருகிறது
கேரளாவில் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் உடல் தற்போது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: கேரளாவில் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் உடல் தற்போது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. கேரளா அரசு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணசாமியின் உடல் திருவாரூர் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் தற்போது தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த பின் போலீசார் கிருஷ்ணசாமி உடல் இருக்கும் மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். கிருஷ்ணசாமியின் உடல் எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் அந்த மாணவன் கஸ்தூரிக்கு வயது 17 மட்டுமே ஆகிறது என்பதால் அவனிடம் கிருஷ்ணசாமியின் உடல் ஒப்படைக்கப்படவில்லை. கிருஷ்ணசாமி மருத்துவமனையில் மரணம் அடைந்தார் என்பதால் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது கிருஷ்ணசாமியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர் கையெழுத்துக்குப் பின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக தமிழகத்தில் இருந்து அவரது உறவினர் அன்பரசன் வந்திருந்தார். இந்த நிலையில் கேரளா அரசு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணசாமியின் உடல் திருவாரூர் கொண்டு வரப்பட உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications