நரிக்குறவர்களுடன் தீபாவளி கொண்டாடினார் நெல்லை ஆட்சியர்!
நரிக்குறவர்களுடன் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தீபாவளிப் பண்டிகை கொண்டாடினார்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினார்.
தீபங்களின் திருவிழாவான தீபாவளி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுகளும், பலகாரங்களும், புத்தாடைகளும் களை கட்டும். தீபாவளி பண்டிகை ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவத்தை தரும்.

சிலர் மனைவி, மக்களுடனும், மேலும் சிலர் நண்பர்களுடனும் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நரிக்குறவர்களை தனது அலுவலகத்துக்கு நேற்று வரவழைத்தார். அங்கு அவர்களுடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்.
நரிக்குறவர்களும் புத்தாடை அணிந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடினர். இதனால் அப்பகுதியில் ஆரவாரம் இருந்தது.












Click it and Unblock the Notifications