சாதி சான்று வழங்க 100 ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாருக்கு 6 வருடம் சிறை: நெல்லை கோர்ட்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சாதி சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.100 லஞ்சமாக பெற்ற அம்பாசமுத்திரம் துணை தாசில்தாருக்கு 6 வருட சிறை தண்டனை வழங்கி நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

"தப்பு என்ன பனியன் சைசா.. சின்னதா பெருசா என பார்ப்பதற்கு.." என்பது ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் திரைப்படத்தில் வரும் பிரசித்தி பெற்ற வசனம். சிறிதோ, பெரிதோ, தப்பு தப்புதான் என்பது வசனத்தின் உட்கரு.

Nellai: Deputy tahsildar sentenced to 6 years in jail for RS 600 bribe

இந்த வசனத்தை நிரூபிக்கும் ஒரு சம்பவம்தான் இன்று நெல்லையில் நடந்துள்ளது. 2006ம் ஆண்டு அம்பையில் துணை தாசில்தாராக இருந்த ஜெயலட்சுமி, சாதி சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.100 லஞ்சம் பெற்றுள்ளார். இதுகுறித்து சுரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணை நடத்திய நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், ஜெயலட்சுமிக்கு 6 வருட சிறை தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+