சவுதியில் தவிக்கும் நெல்லை பெண் - மீட்க கோரி சகோதரர் கலெக்டரிடம் மனு
நெல்லை: நெல்லையில் வீட்டு வேலைக்கு சவுதி அரேபியாவுக்கு சென்ற நெல்லை பெண் அங்கு சித்ரவதை அனுபவித்து வருவதால் அவரை மீட்க கோரி அவரது சகோதரர் மனு கொடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் அரிகேசவ நல்லூரை சேர்ந்தவர் சுலைமான் சேட். இவர் தனது சகோதரி மகன் ஜாபருடன் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கலெக்டரிம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, "எனது சகோதரி சுலைமாள், சீர்காழியை சேர்ந்த அன்புராஜ் என்ற முகவர் மூலம் கடந்த மே மாதம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்றார்.
அங்கு இரண்டு மாதங்களாக ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் வெவ்வேறு இடங்களில் வீட்டு வேலைக்கு அவரை அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பாஸ்போர்டை பறித்து வைத்து கொண்டனர். மேலும் அவருக்கு பாலியல் கொடுமை செய்துள்ளனர். இதனை எனது சகோதரி அங்குள்ள மற்றொரு தொழிலாளி செல்போன் மூலம் தெரிவித்தார்.
இதனை தெரிந்து கொண்ட அங்குள்ள குடும்பத்தினர் எனது சகோதரியை அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த வாந்தி எடுத்ததாகவும் ஆனால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்காமல் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே எனது சகோதரியை மீட்டு தரவேண்டும்" என அதில் கூறியிருக்கிறார். இம்மனுவால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications