நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்...போலிஸ் வாகனத்தில் இருந்த கைதி துடிக்க துடிக்க வெட்டிக் கொலை
பாளையங்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் 13 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: பாளையங்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் 13 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட கைதி போலீஸ் வாகனத்தில் இருந்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்தவர் கைதி சிங்காரம். இவர் வழக்குக்காக போலீஸ் வாகனத்தில் தூத்துக்குடி நீதிமனற்த்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 போலீஸார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இந்த வாகனம், நெல்லை கேடிசி நகர் செக் போஸ்ட் அருகே சென்றபோது 13 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென வாகனத்தை மறித்தது.

மிளகாய் பொடி நீரை தெளித்து அட்டூழியம்
கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளே இருந்த போலீசார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை அந்த கும்பல் பீய்ச்சி அடித்தது. இதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் நிலைகுலைந்து போயினர்.

போலீஸ் துப்பாக்கியால் கண்ணாடி உடைப்பு
அந்த நேரத்தில் காவல்துறை வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல், போலீஸார் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து கண்ணாடியை உடைத்துள்ளனர். பின்னர், உள்ளே இருந்த கைதி சிங்காரத்தை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்துப் போட்ட அந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிங்காரம்
இதையடுத்து, சிங்காரம் உயிரிழந்துவிட்டதாக கருதிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதன் பிறகு, உயிருக்கு போராடிய கைதி சிங்காரத்தை மீட்ட பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர், தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சைப் பலனின்றி பலி
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இருப்பினும் கைதி சிங்காரம் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை
தாக்குதல் நடைபெற்ற இடத்தை நெல்லை மாநகர காவல் ஆணையர் திருஞானம் தலைமையிலான போலீஸார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகின்றனர். கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் நடந்த கொலையால் அதிர்ச்சி
போலீசார் வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இருந்த கைதியை, மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் பட்டப்பகலில் கொல்ல முயன்ற சம்பவம் நெல்லை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications