தொடர்ச்சியாக தேர்வு.... அடுத்த மாதம் 'பிராக்டிக்கல்'.. விழிபிதுங்கும் நெல்லை மாணவர்கள்!!
நெல்லை: பள்ளி இறுதி வகுப்புகளுக்கு தொடர்ந்து திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. இதனால் அவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் செய்முறை தேர்வுக்கு தயாராக முடியாமல் திணறி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்காக மாணவ, மாணவிகள் இரவு பகலாக படித்து வருகி்ன்றனர்.

இந்த நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு திருப்புதல் தேர்வானது பாடங்களை நினைவு கூரும் வகையில் நடந்து வருகிறது. இதனால் அடுத்த மாதம் நடத்தப்படும் செய்முறை தேர்வுக்கு மாணவர்கள் தயாராக முடியாமல் திணறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து இரண்டாவது கட்ட திருப்புதல் தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
வரும் பிப்ரவரி 9 ஆம் தேதிவரை இந்த தேர்வுகள் நடக்கின்றன. இதனால் பிப்ரவரி இரண்டாவது வாரம் தொடங்கும் செய்முறை தேர்வுக்கு எப்படி தயாராவது என மாணவர்கள் சிண்டை பிய்த்து கொண்டு வருகி்ன்றனர்.
இதுகுறித்து சில மாணவர்கள் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது. நெ்ல்லை மாவட்டத்தில் மட்டும்தான் இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த இருமுறை தேர்வு என்ற கல்வித்துறை நடைமுறையை மெட்ரிக் பள்ளிகள் கடைபிடிப்பதில்லை. இந்த தேர்வுக்கு தயாராவதால் செய்முறை தேர்வுக்கு படிக்க முடியவில்லை. இதனால் தேர்வை எப்படி எதிர்கொள்ள போகிறோமோ என்று அச்சமாக உள்ளது" என கருத்து தெரிவித்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications