ராம்குமார் தற்கொலை முயற்சியா.. அப்படியெல்லாம் இல்லையே... போலீஸ்காரர் கூறிய பரபரப்புத் தகவல்
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ள ராம்குமாரின் வக்கீல் ராம்ராஜ், சிறை போலீஸ்காரருடன் பேசிய பேச்சில் ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று அந்த போலீஸ்காரர் கூறியது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறைத் தரப்பு எதையாவது மறைக்க முயல்கிறதா என்ற சந்தேகமும் இதனால் எழுந்துள்ளது. நேற்று நாலரை மணியளவில் ராம்குமார் வயரைக் கடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், சிறை மருத்துவரிடம் காட்டிய பின்னர் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் வழியில் ராம்குமார் இறந்து விட்டதாகவும் தகவல்கள் கூறின.

ஆனால் நேற்று மாலை 6 மணியளவில் புழல் சிறைக்குத் தொடர்பு கொண்ட ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் பேசியபோது போலீஸ்கராரர் இதை மறுத்துப் பேசியதால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோவில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறதே என்று ராம்ராஜ் கேட்க அதற்குப் போலீஸ்காரர், அப்படியெல்லாம் இல்லை சார், ஓபிக்குக் கொண்டு போயிருக்காங்க, முடியாம என்று கூறுகிறார்.
மேலும் ராம்குமாரின் வீட்டுக்கும் இதுகுறித்து போன் செய்து இதையே கூறியதாகவும் அவர் கூறுகிறார். மேலும் டாக்டர் ஏதோ சாப்பாடு சரியில்லை (புட் பாய்ஸன்) ன்னு சொல்லிட்டிருந்தார் என்று கூறியதாகவும் கூறுகிறார் அந்த போலீஸ்காரர்.
மீண்டும் மீண்டும் ராம்ராஜ் வேறு ஒன்றும் இல்லையே என்று கேட்க, அந்த போலீஸ்காரர் வேறு ஒன்றும் இல்லை சார் என்று திருத்தமாக கூறுகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications