பச்சிளம் பெண் குழந்தையை கழிவு நீர் கால்வாயில் வீசிய கொடூரம்: வீடியோ
சேலம் முள்ளுவாடி ரயில்வே சாக்கடையில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சேலம்: சேலம் முள்ளுவாடி ரயில்வே தண்டவாளத்தின் அடியின் ஓடும் கழிவுநீர் கால்வாயில் கட்டைப் பையில் வைத்து பெண் சிசுவை தூக்கியெறிந்துள்ளனர். இறந்தநிலையில் மீட்கப்பட்டுள்ள சிசுவை தூக்கியெறிந்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் முள்ளுவாடி ரயில்வே தண்டவாளத்துக்கு அடியே கழிவுநீர் சாக்கடை ஒன்று ஓடுகிறது. அதில் கட்டைப்பையில் வைத்து வீசப்பட்ட பெண் சிசுவின் உடல் இருந்துள்ளது. அந்த சிசு பிறந்து சில நாட்களே ஆகியுள்ளது. தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத நிலையில் குழந்தை வீசப்பட்டுள்ளது.

அதைக் கண்ட பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வந்த போலீசார் சிசுவின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் குழந்தை என்பதால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications