For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி எல்லாம் சும்மா.. அதுக்கு அடுத்து இன்னொன்னு இருக்கு.. வரிசையில் காத்திருக்கும் புதிய புயல்!

ஓகி புயலுக்கு அடுத்தபடியாக அந்தமானில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஓகி புயல் எல்லாம் சும்மா..அதுக்கு அடுத்து இன்னொன்னு இருக்கு.. வீடியோ

    சென்னை: இந்த வருடத்தின் முதல் புயலாக உருவாகி இருக்கிறது ஓகி புயல். இந்த புயலே இன்னும் முழுவதுவாக முடியாமல் இருக்கும் நிலையில் அடுத்த புயலுக்கான அறிவிப்புகள் வெளியாகிவிட்டது.

    தற்போது உருவாகி இருக்கும் ஓகி புயல் கன்னியாகுமரி பகுதியில் இருக்கிறது. இது எப்போது வேண்டுமானாலும் அரபிக் கடல் நோக்கி நகரலாம். ஆனால் அதே சமயத்தில் அந்தமானில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை எப்போது வேண்டுமானாலும் புயலாக மாறலாம் என்று கூறப்படுகிறது.

    மேலும் இந்த தாழ்வு நிலை குறித்த அதிர்ச்சியுட்ட கூடிய பல தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

    முதல் புயல் ஓகி

    முதல் புயல் ஓகி

    இந்த வருட மழை காலத்தின் முதல் புயல் என்ற சிறப்பு பெயருடன் கன்னியாகுமரியை தாக்க தொடங்கி இருக்கிறது ஓகி புயல். தற்போது இந்த புயல் கன்னியாகுமரிக்கும், திருவனந்தபுரத்திற்கும் இடையில் இருக்கிறது. இதனால் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. கன்னியாகுமரியில் தற்போது 70 கிமீ வேகத்தில் மோசமாக காற்று வீசிக் கொண்டு இருக்கிறது.

    புயலை சமாளிக்கலாம்

    புயலை சமாளிக்கலாம்

    இந்த புயலை கொஞ்சம் எளிதாக சமாளித்துவிடாமல் என்றுதான் எல்லா வானிலை ஆய்வு மையங்களும் கணித்து இருக்கிறது. தற்போது இந்த ஓகி புயல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவாக்கிக் கொண்டே வருகிறது. இது அரபிக்கடலை நோக்கி சென்று தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தமிழ்நாட்டில் எங்குமே கரையை கடக்காது. எனவே இதை குறித்து அதிக அச்சப்பட தேவையில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    அடுத்த புயல்

    அடுத்த புயல்

    ஓகி புயல் சரியாக நாளை மதியம் தன் வீரியத்தை இழக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் அந்த புயல் முடிந்து இரண்டு நாள் இடைவெளியில் மூன்றாம் தேதி அடுத்த புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இதுதான் ஓகி புயலைவிட மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்கள். சென்னையில் இரண்டு வாரத்திற்கு முன் மழை பெய்த போதே இந்த புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

    எப்படி உருவாகும்

    எப்படி உருவாகும்

    தற்போதுதான் இந்த புயலுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருக்கிறது. அந்தமான் கடல் பகுதிக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை உருவானது. தற்போது வரை இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் 3ம் தேதிக்கு பின் இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவாக வாய்ப்புள்ளது. தொடக்கத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. அதன்பின் புயல் சின்னமாக மாறும். இது புயல் சின்னமாக மாறினால் கண்டிப்பாக தமிழ்நாட்டு கடல் பகுதியில்தான் கரையை கடக்கும்.

    English summary
    First ever cyclone of this season 'Ockhi' has formed in Arabian sea. At the same time new cyclone has formed in the Andaman Island. It may cause heavy rain for few more days in Chennai and Coastal areas of Tamilnadu. It also will convert into storm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X