வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்.. தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு!
வடமேற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: வடமேற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களில் நேற்றும் பலத்த மழை பெய்தது.
அதிகபட்சம் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 70 மி.மீ, வால்பாறையில் 50 மி.மீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 40 மி.மீ மழை பதிவானது. இதனால் வால்பாறையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீவிரமடைந்தது
கடந்த வாரம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பருவமழை மேலும் தீவிரம் அடைந்தது. கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கியது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
அதன் தாக்கத்தால் தமிழக மலைப்பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததையடுத்து மழைப்பொழிவும் குறைந்தது.

வடமேற்கு திசை
இந்த நிலையில், வடமேற்கு வங்க கடலில் நேற்று மீண்டும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியும் இதே வடமேற்கு திசையில் தான் நிலைகொண்டிருந்தது.

மீண்டும் மழைக்கு வாய்ப்பு
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினால் கேரளா மற்றும் கர்நாடகாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நகர்வை பொறுத்தே
ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாளில் இதன் நகர்வை பொறுத்தே அடுத்தக்கட்ட தகவல் தெரியவரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகம் புதுச்சேரியில்
இதற்கிடையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications