கள்ளக்காதலால் விபரீதம்...கல்யாணமான 4 நாட்களில் மனைவி 1 மாத கர்ப்பம் – அதிர்ச்சியில் கணவர்!
கோவை: திருமணமான நான்கு நாட்களில் மனைவி கர்ப்பமடைந்ததால் கணவன் அதிர்ச்சி அடைந்தார்.கடைசியில் காதலால் வந்த வினை என்பதை அறிந்து குடும்பத்தினர் அனைவருமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் சுந்தரசாமி. இவரது மகன் ஜெயம் கிட்டு. இவருக்கும் பொள்ளாச்சி இந்திரா நகரை சேர்ந்த ராதா என்பவருக்கும் கடந்த 12 ஆம் தேதி அன்று உறவினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெற்றோர் ஆசியுடன் திருமணம் நடைபெற்றது.
அதன்பின்னர் ராதா கணவர் ஜெயம் கிட்டுவின் வீட்டில் தங்கினார்.
முதலிரவில் மனைவி மயக்கம்:
திருமணமான முதல் நாள் இரவு கணவன் , மனைவி பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென்று ராதாவுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. அப்போது திருமணத்துக்காக இரவு, பகல் கண்விழித்து இருந்ததால் உடல்நிலை பாதித்து இருக்கலாம் என ஜெயம் கிட்டு நினைத்தார். மனைவிக்கு ஆண்டிபயாட்டிக் மாத்திரை கொடுத்து ஆறுதல் படுத்தினார்.
4 நாளில் 1 மாத கர்ப்பம்:
ஆனால் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக ராதாவுக்கு அடிக்கடி வாந்தியும், தலைசுற்றலும் இருந்து வந்தது. இதனால் சந்தேகமடைந்த ஜெயம் கிட்டு மனைவி ராதாவை அழைத்து கொண்டு அருகிலிருந்து மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ராதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 1 மாத கர்ப்பமாக இருப்பதாக ஜெயம் கிட்டுவிடம் கூறினர்.
மயக்கம் போட்ட மாப்பிள்ளை:
இதைக்கேட்ட புதுமாப்பிள்ளை ஜெயம் கிட்டுவுக்கு மயக்கம் வராத குறை மட்டும் தான். மருத்துவமனையில் மனைவியிடம் எதுவும் பேசாத ஜெயம் கிட்டு அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் பெற்றோரிடம் நடந்தவற்றை கூறினார்.
அதிர்ச்சியான மாமியார், மாமனார்:
இதைக்கேட்ட பெரியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் திருமணமான 4 நாளில் பெண் 1 மாத கர்ப்பமா என விவாதம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதுகுறித்து ராதாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெண்ணிடம் விசாரணை:
தகவலறிந்ததும் ராதாவின் பெற்றோரும் தனது மாப்பிள்ளையின் வீட்டுக்கு வந்தனர். அங்கு வைத்து ராதாவிடம் இருவீட்டாரும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ராதா எதுவும் பேசவில்லை. நீண்ட நேரம் இருவீட்டாரும் போராடி ராதா அசையாததால் மாப்பிள்ளை வீட்டார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
காவலில் ஒப்படைப்பு:
அவர்கள் போலீசாரிடம் திருமணமாகி 1 வாரமே ஆகிறது. அதற்குள் புதுப்பெண் 1 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து கேட்டால் வாய்திறக்க மறுக்கிறார் என்று கூறி மருத்துவர் அளித்த சான்றிதழை போலீசாரிடம் காண்பித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் புதுப்பெண் ராதாவிடம் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் கூறிய தகவல் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஒப்புதல் வாக்குமூலம்:
"என்னுடைய கர்ப்பத்துக்கு காரணம் கோவை குறிச்சியை சேர்ந்த மதி ஆவார். அவருடைய அக்காவும், நானும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தோம். அப்போது மதியின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். இதில் எங்கள் இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டது.
கூடா நட்பில் விபரீதம்:
அது நாளடைவில் காதலாக மாறியது. இந்தநிலையில் எனக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த ஜெயம் கிட்டுவை நிச்சயம் செய்தனர்.கடந்த மாதம் திருமணம் நிச்சயம் ஆனது குறித்து மதியிடம் கூற அவருடைய வீட்டுக்கு சென்றேன். அங்கு வீட்டில் மதி மட்டும் தனியாக இருந்தார். அப்போது நாங்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்தோம். அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட உறவு தான் இன்று என் வாழ்க்கைக்கு தடையாகிவிட்டது" என்று கதறினார்.
உறவே முறிந்தது:
இதைத்தொடர்ந்து ஜெயம் கிட்டுவின் குடும்பத்தினர் திருமணத்துக்கு முன்பே வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த பெண் தங்கள் மகனுக்கு வேண்டாம் என்று கூறினர். இதேபோல் ஜெயம் கிட்டுவும் மனைவி தனக்கு வேண்டாம் என கூறி போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.
ராதா - மதியிடம் விசாரணை:
இதையடுத்து போலீசார் மதி குறித்து விசாரணை நடத்த ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோவை ராமநாதபுரம் போலீஸார் ராதா மற்றும் மதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications