கூட்டணியால் எந்தப் பயனும் இல்லை... உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியாம்: பொன்.ராதாகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு அண்டை மாநிலங்கள் தண்ணீரை தராததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறி ஆகியுள்ளது என்றார். மேலும், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட போராட்டங்கள் தேவையாக இருந்தாலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், போராட்டங்களை நடத்தி உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி இடுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்றும் தனித்தே போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications