நெருங்கும் கிறிஸ்துமஸ்… பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாட்டம்
கிறிஸ்துமஸ் விழா காலம் நெருங்கி வரும் நேரத்தில் வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
நெல்லை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விழாக் காலம் நெருங்கி வரும் வேளையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வங்கிகளில் தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததால் மக்கள் வங்கிகளில் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை பெற்று வருகின்றனர். என்றாலும் மக்களிடம் போதிய பண புழக்கத்தில் இல்லை. பணத் தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட தேவைகளுக்கு கூட போதிய பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது.

பணத் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல பகுதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படவில்லை. நகரின் மையப்பகுதிகளில் உள்ள ஏடிஎம்களும் போதிய பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். செயல்படும் ஒரு சில ஏடிஎம்களில் 2000 ரூபாய் மட்டும் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதால் சில்லறை பிரச்சனையும் உருவாகியுள்ளது.
பல வங்கிகளில் போதிய பணம் கையிருப்பில் இல்லாததால் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச தொகையான ரூ.24 ஆயிரத்தை கூட வங்கிகளால் வழங்க முடியவில்லை. பெரும்பாலான வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பணம் வழங்கப்படுவதில்லை. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை அடுத்தடுத்து வருவதால் பெரும்பாலான மக்கள் பணம் விழாவிற்கான செலவுகளை செய்யக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகி்ன்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications