தேர்தலுக்குப் பின் பாஜக- அதிமுக கூட்டணி அமைக்கும் என்பது வெறும் வதந்தி: வெங்கையா நாயுடு
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு பின்னர் பாஜவுடன், அதிமுக கூட்டணி அமைக்கும் என்பது வெறும் வதந்தி தான் என விளக்கமளித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் வெங்கையா நாயுடு கூறியதாவது:-
பாஜவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, அச்சுறுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் பேசியது கண்டிக்கத்தக்கது. ஜனநாயக நாட்டில் இதுபோன்று வன்முறை பேச்சுக்களை அனுமதிக்க முடியாது. தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால் அந்த வேட்பாளர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. இம்ரான் மசூத் வன்முறையை தூண்டும் விதத்தில் கொலை வெறியோடு பேசிய பேச்சை ஏற்றுக்கொள்ளப் போகிறதா, இலலையேல் பேசியது தவறு என அந்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா என்பதை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்த வேண்டும். ஜனநாயக நெறிமுறைகளில் நம்பிக்கை இருக்குமானால் உடனடியாக அந்த வேட்பாளரை கட்சியை விட்டு நீக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அதை செய்யுமா என்பது சந்தேகம்தான்.
காங்கிரசுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாக தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் என்ன பேசுகிறோம் என தெரியாமல் இதுபோன்ற வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுகின்றனர்' என்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தில் பாஜவையோ, குறிப்பாக நரேந்திர மோடியை பற்றியோ விமர்சனம் செய்யாமல் பிரசாரம் மேற்கொள்வது பற்றியும், அதன் பின்னணியில் தேர்தலுக்கு பின் பாஜவோடு அதிமுக கூட்டு சேர்ந்துவிடும் திட்டமிருப்பதாக கூறப்படுவது பற்றியும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘அது வெறும் வதந்தி தான். அதில் உண்மை எதுவும் இல்லை' என பதிலளித்தார் வெங்கையா நாயுடு.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications