தமிழகத்திலும் பீஹார் நிலைமை தானா?...வேதாரண்யத்தில் 2.5 கி.மீ சடலத்தை சுமந்து சென்ற உறவினர்கள்!
வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனைகளில் அமரர் ஊர்தி வசதியின்றி உறவினர்களே சடலத்தை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி இல்லாததால் உறவினர்களே தூக்கிச் சென்ற சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
வேதாரண்யம் நகரப்பகுதிக்குட்பட்ட மணியன் தீவு கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயது நடராஜன், இவர் நேற்று முன்தினம் சாலைவிபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உடற்கூறு ஆய்வு முடிந்து உறவினர்களிடம் நேற்று உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாத நிலையில் வெளியில் இருந்தும் வாகனம் வர தாமதமாகியுள்ளது.

மக்களிடையே பரபரப்பு
இதனால் சடலம் இருந்த ஸ்டெர்ச்சரோடு சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிற்கு உறவினர்கள் உடலைத் தூக்கிக் கொண்டு நடந்தே சென்றுள்ளனர். நகர வீதிகள் வழியே சடலம் எடுத்துச் செல்லப்பட்டதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் அதிருப்தி
வேதாரண்யத்திற்குட்பட்ட 5 காவல்நிலைய சரகங்களில் நேரிடும் உயிரிழப்புகளுக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் தான் உடற்கூறு ஆய்வு நடத்தப்படுகிறது. ஆனால் இங்குள்ள தாலுகா தலைமை மருத்துவமனையில் அமரர் ஊர்தி வசதி இல்லாதது மக்களுக்கு அதிருப்தி அளித்துள்ளது.

விளக்கம் கேட்டுள்ள ஆட்சியர்
எனவே உடனடியாக அமரர் ஊர்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாதது குறித்து தலைமை மருத்துவர் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகமும் அப்படித்தானா?
ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி வசதி இல்லையென்று இறந்தவர்களின் உடலை தாங்களே சுமந்து சென்ற அவலங்கள் பீஹார் மாநிலத்தில் அடிக்கடி அரங்கேறும். ஆனால் சுகாதாரத்துறையில் முன்னோடியாக இருக்கும் தமிழகத்திலும் இதே நிலை தான் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது வேதாரண்யத்தை நடந்துள்ள சம்பவம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications