For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர்வாடி பள்ளி குழந்தைகள் யாருக்கும் கண் பார்வை பாதிப்பு இல்லை.. நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

நெல்லை அருகே பள்ளி குழந்தைகள் யாருக்கும் கண் பார்வை பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பள்ளி விழாவில் வைத்த லைட்டுகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு- வீடியோ

    நெல்லை: ஏர்வாடி பள்ளி குழந்தைகள் யாருக்கும் கண் பார்வை பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழாவின் போது அதிக திறன் கொண்ட மின் விளக்குகள் பயன்படுத்தியதால் 100க்கும் மேற்கட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டது.

    இதையடுத்து மாணவர்கள் நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்து தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியுள்ளனர்.

    பள்ளி முற்றுகை

    பள்ளி முற்றுகை

    மின்விளக்குகளிலிருந்து வெளிவந்த கதிர்வீச்சுகள் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட விழாவில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. விழா முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் கண் எரிச்சல் அதிகமானதால், இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர்.

    ஆட்சியர் தகவல்

    ஆட்சியர் தகவல்

    இதனை தொடர்ந்து மாணவர்கள், பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் யாருக்கும் கண் பார்வை பாதிப்பு இல்லை என்றும், அனைவரும் வெளிநோயாளியாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

    பார்வையிட்ட ஆட்சியர்

    பார்வையிட்ட ஆட்சியர்

    தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, குழந்தைகளைப் பார்வையிட்டதுடன், மருத்துவமனைக் கண்காணிப்பாளரிடம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

     அறிகுறிகள் மட்டுமே

    அறிகுறிகள் மட்டுமே

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகத் திறனுள்ள மின்விளக்கொளி பட்டதால் மாணவர்களின் கண்களில் நீர் வடிதல், கண் சிவந்திருத்தல் ஆகிய அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்தார்.

    சரியாகிவிடும்

    சரியாகிவிடும்

    யாருக்கும் பார்வை பாதிக்கப்படவில்லை என்றும் அனைவரும் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பி வட்டதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் 2 நாட்களில் கண்ணீர் வடிதல் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குறிப்பிட்டார்

    English summary
    Nellai Collector Sandeep Nanthuri says no one affected by eye sight. He also said that everything will be alright.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X