ரஜினிக்கு வழங்கிய விருதில் அரசியல் இல்லை: பாஜக
வேலூர்: பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி வேலூரில் இன்று நடந்தது. மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இதில் கலந்து கொண்டார்.
அப்போது நிருபர்களுக்கு தமிழிசை அளித்த பேட்டி: லயோலா கல்லூரி கருத்து கணிப்பில் அ.தி.மு.க., தி.மு.க. வுக்கு அடுத்தபடியாக பாஜக வளர்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. பாஜகவில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்களாக சேருகின்றனர்.

தமிழக அரசு முடங்கி கிடக்கிறது. அரிசி, முட்டை, பருப்பு, சாலை பணிகளில் ஊழல் நடந்துள்ளது. குழந்தை இறப்பை அரசியலாக்க வேண்டாம் அதே நேரம் அந்த பிரச்சினையை விட்டுவிட முடியாது. குழந்தைகள் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை எடுத்து வருகிறார். கர்நாடக அரசு காவிரியில் புதிய அணை கட்டுவதை கடுமையாக எதிர்க்கிறோம். இதுபற்றி உமா பாரதிக்கு கடிதம் எழுதியுள்ளோம். நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.
ரஜினிக்கு சாதனையாளர் விருது வழங்கியதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. அவரது திறமை, சாதனையை மதித்து விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications