மூழ்கிய வடசென்னை.... குடும்பம் குடும்பமாக பல்லாயிரம் பேர் அகதிகளாக தொடர்ந்து வெளியேறும் அவலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடையாறு ஆற்றின் பெருவெள்ளம் தென்சென்னையை மூழ்கடித்ததைப் போல புழல் ஏரியில் இருந்து திறந்துவிடப்படுகிற நீர் வடசென்னையை விழுங்கியுள்ளது. அப்பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை கைவிட்டுவிட்டு குடும்பம் குடும்பமாக உயிர் தப்பித்தால் போதுமென அகதிகளாக தொடர்ந்தும் வெளியேறி வருகின்றனர்.

கொட்டிய பேய்மழையால் தென்சென்னை, சென்னை புறநகர்களைப் போல வடசென்னையும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. தென்சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி அடையாற்றில் சேர்ந்து நூறாண்டு காணாத வகையில் வெள்ளத்தை ஏற்படுத்தியது.

No rescue service.. North Chennai residents to flee

இதேபோல் புழல் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரானது வடசென்னை வழியே வங்கக் கடலில் கலக்கிறது. இந்த நீர் தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், கொடுங்கையூர், மணலி, மணலிபுதுநகர் என வடசென்னயின் பல பகுதிகள் வழியாக செல்கிறது. தற்போதும் தொடர்ந்து புழல் ஏரியில் நீர் திறந்துவிடப்படுவதால் வடசென்னையின் இந்த அனைத்து பகுதிகளுமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

இந்த வெள்ளநீரின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதால் உயிர் பிழைத்தால் போதும் என வீடுகளைக் கைவிட்டு விட்டு அகதிகளாக குடும்பம் குடும்பமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். வியாசர்பாடி பாலத்தின் வழியாக அகதிகளைப் போல அலை அலையாக மக்கள் வெளியேறுகின்றனர்.

No rescue service.. North Chennai residents to flee

இதனிடையே இன்று காலை புழல் ஏரி உடைந்துவிட்டதாக சிலர் வதந்தியை கிளப்பிவிட்டனர். இதனால் வடசென்னையில் பெரும் பீதி ஏற்பட்டது.

தென்சென்னையில் மேற்கொள்ளப்பட்டதைப் போல வடசென்னையில் முழு வீச்சில் ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் வடசென்னையை காப்பாற்ற முடியும். இல்லையெனில் மிகப் பெரிய பேரவலம் வடசென்னையில் நிகழ்ந்துவிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

தி. நகர்

தி. நகரில் இலவச உணவு. தயவு செய்து ஷேர் செய்யவும் @selvaraghavan @Chinmayi @Tanvisha @RJ_Balaji @Actor_Siddharth @iamVikramPrabhu

பிஸ்கட்

1000 பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 500 சானிடரி நாப்கின்கள் தி. நகரில் உள்ளது. தொடர்புக்கு சுரேஷ்- 8056963583. தி.நகரில் வினியோகிக்க தயார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+