பைக் வீலிங், ரேசிங், ஈவ்டீஸிங் கூடாது.. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னை போலீஸ் கட்டுப்பாடு
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 1 மணி வரை காவல்துறை அனுமதியளித்துள்ளது. கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 1 மணி வரை காவல்துறை அனுமதியளித்துள்ளது. கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரிரு நாட்களே உள்ள நிலையில் புத்தாண்டை வரவேற்கும் ஏற்பாடுகளில் கேளிக்கை விடுதிகளும் ஹோட்டல்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறைவிதித்துள்ளது.

அதன்படி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடும் கேளிக்கை விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் அதற்கான தனி உரிமங்களை பெற வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு ஒருமணி வரை சிறப்பு உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேளிக்கை விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் இரவு ஒருமணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிக்கு மேல் மதுவிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீச்சள் குளங்கள் மேல் தற்காலிக மேடைகள் அமைக்க தகுதிச்சான்றிதழ் பெற வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாகசங்கள் செய்யக்கூடாது.
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகனம், கார்களை வேகமாக ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடலில் இறங்கக்கூடாது. கடலுக்கு அருகில் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாழ்த்து கூறும் பெயரில் பெண்களை கேலி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications