எந்த கொம்பனாலும் ஆட்சியை தொட முடியாது... எங்களை பிரிக்க முடியாது - ஈபிஎஸ்
எங்களை பிரிக்க நினைப்பவர்களின் கனவு பலிக்காது என்றும் ஆட்சியை எந்த கொம்பனாலும் தொடமுடியாது என்றும் முதல்வர் ஈபிஎஸ் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்களினால் கட்டிக்காக்கப்படும் மாபெரும் இயக்கம் அதிமுக என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் தொடக்கூட முடியாது என்றும் கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்ஜிஆர் சிலைக்கு அருகில், ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்துகொண்டனர்.முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், தொண்டர்கள் அனைவரும் ஜெ.வின் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

ஈபிஎஸ் பேச்சு
சிலை திறப்பு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் கட்சியை பிரிக்க வேண்டும் என்றும் சிலர் கனவு காண்பதாக குற்றம் சாட்டினார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுகவை எஃகு கோட்டையாக கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. ஒன்றரை கோடி விசுவாசமான தொண்டர்கள் நிறைந்த கட்டுப்பாடான இயக்கம் அதிமுக.

இருபெரும் தலைவர்கள்
முதல்வர், எம்ஜிஆர், ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய எக்கு கோட்டை அதிமுக. பல்வேறு சோதனைகளை படிக்கட்டுகளாக்கி கட்சி தொடங்கி எம்ஜிஆர் பல வெற்றிகளை குவித்ததார். கட்சி இரண்டாகப் பிரிந்த நேரத்தில் பல சோதனைகளைக் கடந்து கட்சியை ஜெயலலிதா இணைத்தார்.

அதிமுக எஃகு கோட்டை
இந்தியாவிலேயே ஒரு கட்டுப்பாட்டோடு உள்ள இயக்கம் அதிமுக என்பதை ஜெயலலிதா நிரூபித்தார். நாட்டு மக்களின் நலனுக்காக 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

கட்சி, ஆட்சியை கலைக்க முடியாது
அதிமுகவை உடைக்கவோ, ஆட்சியை கலைக்கவோ யாராலும் முடியாது. ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களின் நினைப்பெல்லாம் பகல் கனவாகவே முடிந்துவிடும் . நாங்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பயணித்து கொண்டிருக்கிறோம்.எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications