என்னையும், என் தம்பி ஸ்டாலினையும் யாராலும் பிரிக்க முடியாது: அழகிரி திடீர் பல்டி
தேனி: கொள்கையால் மட்டுமே பிரிந்துள்ளோமே தவிர என் சகோதரர் மு.க. ஸ்டாலினுடனான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மு.க. அழகிரி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மு.க. ஸ்டாலின் என் சகோதரர். நாங்கள் கொள்கையால் மட்டுமே பிரிந்திருக்கிறோமே தவிர எங்களின் உறவை யாராலும் பிரிக்க முடியாது. கருணாநிதி இல்லை எனில் திமுகவே இல்லை. மேலும் புதிய கட்சி துவங்கும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை என்றார்.

நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆரூண் மற்றும் மதிமுக வேட்பாளர் அழகு சுந்தரம் ஆகியோர் அழகிரியை சந்தித்து ஆதரவு கோரினார்கள்.
நேற்று முன்தினம் ராமநாதபுரம் சென்ற அழகிரி மு.க. ஸ்டாலின் தன்னை கட்சியில் இருந்து நீக்கக் கோரி கருணாநிதியை கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், அதனால் தான் அவர் தன்னை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று தனக்கு ஸ்டாலினுடனான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று அழகிரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications