48 மணிநேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை… வானிலை ஆய்வு மையம்
சென்னை: அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகம், புதுவையில் இடியுடங் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இருப்பினும் இந்த மழை கேரள மாநிலத்திலும், கர்நாடக மாநிலத்திலும் தீவிரம்அடைந்துள்ளது.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியில் சில இடங்களிலும் நேற்று நள்ளிரவில் கன மழை பெய்தது.
சென்னையிலும் நேற்று நள்ளிரவில் பெய்த கன மழைக்கு சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது.
முக்கியமான சாலைகளில் சேரும், சகதியும் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் ஒரு சில இடங்களில் லேசான தூரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications