எச். ராஜா பல்டி வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை அறியப்படும்... ஓ.பன்னீர்செல்வம் உறுதி!
பெரியார் குறித்து எச். ராஜா கூறிய கருத்துகள் மிகவும் கண்டனத்திற்குரியது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பெரியார் குறித்து எச். ராஜா கூறிய கருத்துகள் மிகவும் கண்டனத்திற்குரியது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முகநூலில் அந்த கருத்தை தான் பதிவிடவில்லை என்று எச். ராஜா பல்டி அடித்துள்ளார் அதன் உண்மைத் தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டத்திற்கு பிறகு முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பெரியார் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறிய கருத்துகள் கண்டனத்திற்குரியவை. அவருடைய உதவியாளர் தான் பதிவு செய்தார் என்று எச். ராஜா கூறும் கருத்தும் அபத்தமாக உள்ளது.

எச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்
தனது தவறுக்கு எச். ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிட இயக்கத்தின் தலைக்காவிரியாக இருப்பவர் தந்தை பெரியார். அவர் விதித்த பகுத்தறிவு கொள்கைகளால் தான் இன்று சாதாரண மனிதன் கூட முதல்வராக, பொதுவாழ்வில் ஏற்றம் பெறுபவர்களாக இருக்க முடிகிறது.

பெரியார் பற்றிய கருத்தை ஏற்க முடியாது
தமிழக மக்களுக்கான சமுதாய புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார். அவரைப் பற்றி எச். ராஜா கூறிய கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை.

எச்.ராஜா பல்டி விசாரிக்கப்படும்
vஎச். ராஜா தானே பல்டி அடித்து தான் அந்தப் பதிவை போடவில்லை என்று கூறி இருக்கிறார். அதன் உண்மைத்தன்மை என்ன என்பது கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரியார் தமிழ்ச்சமுதாயம் வளர்த்தவர்
துணிச்சலான கருத்துகளை சொல்லக்கூடியவர் தந்தை பெரியார். தமிழ்ச்சமுதாயம் வளர்வதற்காகவே தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் தந்தை பெரியார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications