பிப்ரவரி 11ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் துவங்கி 5 நாட்களுக்கு நடக்கும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 11ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் கடந்த 20ம் தேதி துவங்கியது. ஆளுநர் ரோசைய்யா உரையுடன் துவங்கிய தொடரில் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது.

கடந்த 23ம் தேதி எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தார். அத்துடன் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
வரும் மே மாதத்துடன் அதிமுக அரசின் ஆட்சி காலம் நிறைவடைகிறது. சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக அரசு தனது ஆட்சி காலம் முடியும் முன்பு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.
இதற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி 11ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது.
இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்வார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு அது குறித்து எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெறும். விவாதத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் பதில் அளித்து பேசுவார். பட்ஜெட் கூட்டத்தொடர் 5 நாட்கள் நடக்கும் என்று கூறப்படுகிறது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications