ஸ்டாலின் ஒரு வித்தியாசமான சிந்தனையாளராம்.. புகழ்கிறாரா, கிண்டல் செய்கிறாரா ஓ.பி.எஸ்?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: யாருமே சிந்திக்க முடியாத கருத்துக்களை அவ்வப்போது கூறுவது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாடிக்கை என்று முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்தவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி வந்திருந்தார். அவருடன் ஆதரவாளரான கே.பி.முனுசாமியும் உடன் வந்திருந்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் பேட்டியளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

நிருபர்களின் கோரிக்கையையேற்று பேட்டியளித்தார் பன்னீர் செல்வம். அப்போது ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடப்போவதாக டிடிவி தினகரன் கோஷ்டியை சேர்ந்த புகழேந்தி கூறியது பற்றி கேட்கப்பட்டது.

புகழேந்திக்கு பதில் லேது

புகழேந்திக்கு பதில் லேது

ஆனால், இதற்கு பன்னீர்செல்வத்தை பதிலளிக்க வேண்டாம் என தடுத்த முனுசாமி, அவரே அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசினார். முனுசாமி கூறுகையில், "புகழேந்திக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. அவர் கர்நாடகாவை சேர்ந்தவர். அவரது கருத்தெல்லாம் ஒரு சப்ஜெக்ட்டே கிடையாது. போட்டோ வெளியிட்டால் வெளியிடட்டும்" என்றார்.

பதில் சொல்ல தவிர்ப்பு

பதில் சொல்ல தவிர்ப்பு

அதிமுகவில் அமைக்கப்பட்ட இரு குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்துமா, அல்லது கலைந்துவிட்டதா என்ற நிருபரின் கேள்விக்கு, "நீங்களே கேள்வியையும் கேட்டு, பதிலையும் கூறிவிடுகிறீர்கள். நான் என்ன பதில் சொல்ல.." என கூறிவிட்டு அந்த கேள்வியை லாவகமாக தவிர்த்துவிட்டார் பன்னீர்செல்வம்.

சிந்தனையாளர் ஸ்டாலின்

சிந்தனையாளர் ஸ்டாலின்

முதல்வராக இருந்தபோது விசாரணை கமிஷனுக்கு உத்தரவிடாமல், இப்போது ஜெயலலிதா சாவு குறித்து பன்னீர்செல்வம் பேசுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்போது, இதுபோல யாருமே சிந்திக்க முடியாத கருத்துக்களை கூறுவது வாடிக்கை என பதிலளித்தார் பன்னீர்செல்வம்.

நம்பி ஏமாந்துவிட்டோம்

நம்பி ஏமாந்துவிட்டோம்

ஜெயலலிதா மரணத்திலுளஅள மர்மம் குறித்து இப்போது பேசுவது ஏன் என்ற கேள்விக்கு, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது தங்களை பார்க்க அனுமதிக்க வில்லை என்றும், மருத்துவ குழுவினர் சொன்னதை நாங்கள் நம்பினோம் என்றும், எனவேதான் மர்மம் குறித்து விசாரிக்க கோருவதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.

எஸ்கேப்

எஸ்கேப்

கொடநாடு சம்பவங்கள் குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் கிளம்பி சென்றுவிட்டார் பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிச்சாமி அணியுடனான பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க பன்னீர்செல்வம் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+