தினகரனை என்னுடன் இருந்தவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக சந்தித்தேன்.. உண்மையை வெளிப்படுத்திய ஓபிஎஸ்
Recommended Video

சென்னை: டிடிவி தினகரனை நான் சந்தித்து குறித்து எனக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தபோது, ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது: 2017ம் ஆண்டு, ஜூலை 12ம் தேதி டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான். அப்போது நான் தர்மயுத்தம் நடத்தி வந்தேன். எனவே அவரை சந்திக்க கூடாது என்று நினைத்தேன். ஆனால் நூறு முறையாவது எனக்கு அழைப்பு வந்தது. எனவே மரியாதை நிமித்தமாக நான் சந்தித்தேன். இது எனது உடன் இருந்தவர்களுக்கு கூட தெரியாது.

[நான் ஏன் எடப்பாடி பழனிச்சாமி அணியோடு இணைப்புக்கு சம்மதித்தேன்.. மனம் திறந்த ஓபிஎஸ்]
ஆனால், அவர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் பேசினார். எனவே நான் அவரை விட்டு விலகி வந்துவிட்டேன்.
இதற்கு அடுத்த மாதம்தான் அதிமுக இணைப்பு நடைபெற்றது. அதன்பிறகு தினகரனுடன் எனக்கு தொடர்பே இல்லை.
தினகரன் தரப்பு அளித்த பிரஸ் மீட்டையடுத்து, தினகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இன்று, என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். சின்னத்தனமாக அரசியல் செய்வார்கள் என எனக்கு தெரியாது என்று அந்த நபர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications