8 வழிச்சாலை படுத்தும் பாடு.. செய்யாறில் மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளியில் கல் ஊன்றிய அதிகாரிகள்
8 வழிச்சாலைக்காக செய்யாற்றில் மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளியில் அதிகாரிகள் கல் ஊன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

செய்யாறு: சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக செய்யாறில் தேத்துறை அரசு பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதிய போது அதிகாரிகள் கல் ஊன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்காக அவ்வழியில் உள்ள ஊர்களில் இருந்து நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை தமிழக அரசு கையகப்படுத்தி வருகிறது. இதில் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நிலங்களை அளவீடு செய்து கல் ஊன்றும் பணியை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதற்காக கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
தேத்துறை அரசு உயர்நிலைப் பள்ளியும் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து அந்த பள்ளியில் கல் ஊன்ற அதிகாரிகள் சென்றனர்.
#SalemExpressway pic.twitter.com/iIlEWXmJui
— T R B Rajaa (@TRBRajaa) July 4, 2018
அப்போது மாணவர்கள் தரையில் அமர்ந்து தேர்வு எழுதியதையும் பொருட்படுத்தாமல் நவீன கருவி மூலம் வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications