ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல் டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கலக்கம்!
பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சென்னை: பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வந்தது.

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாது மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து விலையை குறைக்கும் முயற்சியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ரூ.2.50 குறைத்தது. மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து அறிவித்தது.
[கனமழை காரணமாக தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!]
இதன்படி, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் உயர்த்தி அறிவித்துள்ளன.
அதன்படி சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து ரூ.84.99 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.77.42 காசுகளாக விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications