கனமழை காரணமாக தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
கனமழை காரணமாக கனமழை காரணமாக தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கனமழை காரணமாக கனமழை காரணமாக தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் நான்காவது நாளாக இன்றும் பரவலாக மழை நீடிக்கிறது. இதன்காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீலகிரியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்க மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் நிர்மல்ராஜ் எச்சரித்துள்ளார்.
[தமிழகத்தில் அடுத்த 45 நாட்களுக்கு இடியுடன் கனமழை வெளுக்குமாம்.. இந்திய வானிலை மையம்!]
தேனியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும் ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ஒரு சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் வினய் விடுமுறை அறிவித்துள்ளார்.
இதேபோல் புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு முதல்வர் நாராயணசாமி விடுமுறை அறிவித்துள்ளது. மொகரம் விடுமுறையை ஈடு செய்ய இன்று பள்ளி, கல்லூரிகள் , அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும், விடுமுறை இல்லை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications