அடுத்த 5 நாட்களுக்கு கன மழை வெளுக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. பரவலாக மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இதனிடையே தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 8 வரை பரவலாக மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

வடமேற்கு திசையில் நகரும்
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடல் சீற்றம்
இதன்காரணமாக அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடல் காற்று பலமாக வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

8ஆம் தேதி பருவமழை
மேலும் அக்டோபர் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்களுக்கு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடிக்கும்.

சில நாட்களுக்கு கனமழை
இந்நிலையில் தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

8ஆம் தேதி புதிய காற்றழுத்தம்
வங்கக்கடலில் 8ஆம் தேதி புதிய காற்றழுத்தம் ஒன்று உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications