அதிமுகவில் இன்னொரு சிதறு தேங்காய்.. விரைவில் உதயமாகும் திவாகரன் ஆதரவு அணி
அதிமுகவில் மேலும் ஒரு கோஷ்டியாக திவாகரன் ஆதரவு அணி உதயமாக உள்ளது.
சென்னை: அதிமுக சசிகலா கோஷ்டியில் தற்போது எடப்பாடி கோஷ்டி தனியாக உருவெடுத்திருக்கிறது. விரைவில் எடப்பாடி கோஷ்டியும் சிதறி திவாகரன் ஆதரவு அணி உதயமாகும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
அதிமுக ஓபிஎஸ், சசிகலா கோஷ்டிகளாக உடைந்து சிதறியது. இந்த இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக தினகரன் குடும்பத்தினரை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கிறோம் என சசிகலா கோஷ்டி அறிவித்தது. இதையடுத்து அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கொங்கு கோஷ்டி முளைத்தது.

எடப்பாடி கோஷ்டி
தங்களது அணியை வலுப்படுத்திக் கொள்வதில் எடப்பாடி தரப்பு தீவிரமாக களமிறங்கியது. இந்நிலையில் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன், அதிமுகவில் மீண்டும் தலையெடுக்கப் போவதாக அறிவித்தார்.

தினகரன் திட்டவட்டம்
அத்துடன் பெங்களூரு சென்று சிறையில் சசிகலாவையும் தினகரன் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்காக 60 நாட்கள் பொறுத்திருக்குமாறு சசிகலா கூறியுள்ளதாக தெரிவித்தார்.

எடப்பாடி கோஷ்டி உதயம்
ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரோ, தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டோம்... அவரும் ஒதுங்கிவிட்டார்... அதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கறார் காட்டினார். இதனால் அதிமுக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி கோஷ்டி உதயமானது.

திவாகரன் கோஷ்டி வருது
உண்மையில் இது எடப்பாடி கோஷ்டியே அல்ல..கொங்கு மற்றும் திவாகரன் கோஷ்டிகள் இணைந்ததுதான் இந்த அணி. எடப்பாடிக்கு இப்போது முட்டுக் கொடுத்து வருவது திவாகரன் தரப்பு அமைச்சர்கள்தான்.. ஒரு கட்டம்வரைதான் எடப்பாடியை திவாகரன் கோஷ்டி தூக்கி எறியும் நாளும் தூரம் இல்லை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications