24 உயர்நீதிமன்றங்கள்.. 652 நீதிபதிகள்.. 69 பேர் மட்டுமே பெண்கள்.. வௌங்கிடும்
இந்தியாவில் மொத்தம் 24 உயர்நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் நீதிபதிகளாக பணிபுரிவோரில் 69 பேர் மட்டுமே பெண்கள்.
சென்னை: இந்தியாவில் நீதிபரிபாலனை செய்யும் நீதிமன்றங்களில் பெண்களின் பங்கு ஆகக்குறைவாய் இருக்கிறது. உயர்நீதிமன்றங்களில் ஒரு சதவீதம் கூட பெண் நீதிபதிகள் இல்லை என்ற வேதனைக்குரிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் மொத்தம் நான்கு உயர்நீதிமன்றங்களில் மட்டுமே பெண்கள் தலைமை நீதிபதியாக உள்ளனர். ஒன்று நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி

ஏற்ற இந்திரா பானர்ஜியாவார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிபதி ரோஹினியும், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மஞ்சுளா செல்லூரும் , கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நிஷிதா நிர்மல் மகாத்ரேவும் (பொறுப்பு) உள்ளனர்.
நான்கு பெண்கள் ஒரே நேரத்தில் உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை வகிப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை. என்றாலும், மொத்தமாக உயர்நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகவே உள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தம் 24 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. அதில் தற்போது பதவி வகிக்கும் நீதிபதிகள் 652 பேர். அவர்களில் 69 பேர் மட்டுமே பெண்கள். இவற்றிலும் அதிகபட்சமாக மும்பை உயர் நீதிமன்றத்தில் 12 பெண் நீதிபதிகள் உள்ளனர். டெல்லி உயர் நீதிமன்றத்தில் 11 பெண் நீதிபதிகளும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 8 உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் இல்லை.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை யாருமே இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால் நாங்களும் ஒருவரை வைத்திருக்கிறோம் என்று பெயருக்கு சொல்ல ஒரே ஒரு பெண் நீதிபதி அங்கே பணியில் இருக்கிறார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஆர். பானுமதிதான். 33 சதவீத பெண் நீதிபதிகளாவது நீதிமன்றங்களில் பணியாற்ற எத்தனைக் காலம் ஆகுமோ?
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications