For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்யசபா தேர்தல்.. 6வது எம்.பி. இடத்துக்கு அதிமுகவும் போட்டியிடவில்லை!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் 6வது எம்.பி. இடத்துக்கு அதிமுகவும் போட்டியிடாததால் திமுக நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறது.

ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியம். தற்போதைய நிலையில் அதிமுகவின் 4 வேட்பாளர்களும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளரும் வெல்வது உறுதி.

6வது எம்.பி. இடத்துக்கு திமுக மட்டுமே வேட்பாளரை நிறுத்தியது. வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாளான இன்று தேமுதிகவும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. அதிமுகவும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

6 இடத்துக்கு 8 பேர் போட்டியிட்டிருந்தால்..

6 இடத்துக்கு 8 பேர் போட்டியிட்டிருந்தால்..

6வது இடத்துக்கு தே.மு.தி.கவும் போட்டியிட்டு அதிமுகவும் ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தால் ஒரு எம்.பிக்கு 29 வாக்குகள் தேவை. 6 இடங்களுக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் போது 2 வாக்குமுறை பயன்படுத்தப்படுவது உண்டு.

2 வாக்குகள் எப்படி?

2 வாக்குகள் எப்படி?

ஒரு எம்.எல்.ஏ தனது முதல் வாய்ப்பாக ஒரு எம்.பி. வேட்பாளருக்கும், இரண்டாவது வாய்ப்பாக இன்னொரு எம்.பி. வேட்பாளருக்கும் வாக்களிக்கவேண்டும். முதல் வாக்குபோல, இரண்டாவது வாக்கு என்பது நேரடி வாக்கு அல்ல. இதற்கு தனி மதிப்பீடு உண்டு. களத்தில் நிற்கும் 8 பேரில் 5 பேர் மட்டுமே முதல் ஓட்டில் 29 வாக்குகள் பெற்றிருந்தார்கள் என்றால், மீதமுள்ள 3 பேரில் இரண்டாவது ஓட்டின் மதிப்பின் அடிப்படையில் யார் அதிக மதிப்புகள் பெறுகிறார்களோ அவர்கள் 6-வது எம்.பி.யாக அறிவிக்கப்படுவார்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.

காங்கிரஸ் ஆதரவை கோராத திமுக

காங்கிரஸ் ஆதரவை கோராத திமுக

கடந்த முறை ராஜ்யசபா தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் ஆதரவை திமுக கோராது என்று அறிவித்துள்ளது.

அதிமுகவும் அறிவிக்கிறது?

அதிமுகவும் அறிவிக்கிறது?

அதே நேரத்தில் திமுகவோ, 6வது இடத்துக்கும் அதிமுக வேட்பாளரை அறிவிக்குமோ என்ற கவலையில் இருக்கிறது. அப்படி அறிவித்தால் தேர்தல் நடைபெறும்.

நெருக்கடியில் திமுக

நெருக்கடியில் திமுக

தி.மு.க.விடம் மொத்தம் 26 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் இருக்கிறது. அ.தி.மு.க. தரப்பில் தலா 27 வாக்குகள் ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்தாலே வெற்றிபெற்றுவிடலாம். அது அ.தி.மு.க கூட்டணிக்கு எளிமையானதுதான்.

அந்த நேரத்தில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை தி.மு.க பெறவேண்டும். தே.மு.தி.க. வராவிட்டால் காங்கிரசின் ஆதரவை தி.மு.க. நாடியே ஆகவேண்டும் என்ற நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

6 இடத்துக்கு 8 பேர் போட்டியிட்டால்...

6 இடத்துக்கு 8 பேர் போட்டியிட்டால்...

6வது இடத்துக்கு தே.மு.தி.கவும் போட்டியிட்டு அதிமுகவும் ஒரு வேட்பாளரை நிறுத்தினால், ஒரு எம்.பிக்கு 29 வாக்குகள் தேவை. 6 இடங்களுக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் போது 2 வாக்குமுறை பயன்படுத்தப்படுவது உண்டு.

2 வாக்குகள் எப்படி?

2 வாக்குகள் எப்படி?

ஒரு எம்.எல்.ஏ தனது முதல் வாய்ப்பாக ஒரு எம்.பி. வேட்பாளருக்கும், இரண்டாவது வாய்ப்பாக இன்னொரு எம்.பி. வேட்பாளருக்கும் வாக்களிக்கவேண்டும். முதல் வாக்குபோல, இரண்டாவது வாக்கு என்பது நேரடி வாக்கு அல்ல. இதற்கு தனி மதிப்பீடு உண்டு.

களத்தில் நிற்கும் 8 பேரில் 5 பேர் மட்டுமே முதல் ஓட்டில் 29 வாக்குகள் பெற்றிருந்தார்கள் என்றால், மீதமுள்ள 3 பேரில் இரண்டாவது ஓட்டின் மதிப்பின் அடிப்படையில் யார் அதிக மதிப்புகள் பெறுகிறார்களோ அவர்கள் 6-வது எம்.பி.யாக அறிவிக்கப்படுவார்கள் என்கிறது தேர்தல் ஆணையம்

நாளை கடைசி நாள்

நாளை கடைசி நாள்

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். அதனால் நாளை பரபரப்பான திருப்பம் ஏற்படுமா என அறிவாலயம் பதற்றத்துடன் இருக்கிறது.

கடைசி நாள்

கடைசி நாள்

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். அதனால் அதிமுகவோ, தேமுதிகவோ வேட்புமனுத்தாக்கல் செய்யுமோ என்ற பதற்றம் திமுகவில் இருந்தது.

நிம்மதி

நிம்மதி

ஆனால் இன்று வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துவிட்டது. தேமுதிகவும் அதிமுகவும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் திமுக இப்போது நிம்மதி பெருமூச்சுடன் இருக்கிறது

English summary
The Election Commission now receiving applications from candidates for the biennial elections to Tamil Nadu’s six Rajya Sabha seats. While the arithmetic for these five seats is confirmed, the Election Commission would decide whether or not an election needs to be held for the sixth seat, after scrutinising the applications on January 29, and finalising the list of candidates by January 31. If there is more than one candidate for the sixth seat, election would be held on February 7, with the results being announced that evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X