வெங்காய லாரியும் - மோட்டார் சைக்கிளும் மோதல் - லாரி சாம்பல்.. பெட்ரோல் பங்க் தப்பியது!
தென்காசி: தென்காசி அருகே வெங்காயம் ஏற்றிவந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் லாரியும் இருசக்கர வாகனமும் தீக்கிரையானது.
புனேவில் இருந்து ஆலங்குளம் காய்கறி சந்தைக்கு 15 டன் வெங்காயம் ஏற்றிவந்த லாரி நேற்று செங்கோட்டையில் இருந்து தென்காசி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது இலஞ்சிக்கும் தென்காசிக்கும் இடையே சென்றுகொண்டிருந்தபோது, அங்குள்ள வாகன எரிவாயு பங்க் முன்பாக வந்தபோது, தென்காசியில் இருந்து இலஞ்சி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் லாரியும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.

இதில் பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. அந்த தீ, லாரி மீதும் பற்றியது. லாரியில் தீ மளமளவென பரவி வெங்காய லாரி முழுவதும் பற்றி எரிந்தது.

இதுக்குறித்து தகவல் அறிந்த தென்காசி, கடையநல்லூர் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் பைக்கில் வந்து தீக்காயமுற்ற இலஞ்சியை சேர்ந்த இசக்கிமுத்து (29), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெங்காய லாரியின் டிரைவர் ராஜன் விபத்திற்கு பிறகு தப்பிஓடிவிட்டார். வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் பங்க்கிற்கு எதிராக தீ விபத்து நடந்தும் எந்த பாதிப்பும் இல்லை.இதுக்குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications