திமுக கூட்டணிக்கு 127 முதல் 139 இடங்கள் கிடைக்கும்- இது ஜெகத் கஸ்பர் அமைப்பின் கருத்துக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு 127 முதல் 139 இடங்கள் கிடைக்கும் என குட்வில் கம்யூனிகேஷன் என்ற அமைப்பு எடுத்த கருத்துகணிப்பு முடிவுகள் அறிவித்துள்ளன.

சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெற உள்ளது. மே 14ம் தேதிவரை கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் தினசரியும் ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளாக வெளியாகி வருகின்றன.

பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியுள்ளது.

திமுகவிற்கு பெரும்பான்மை

திமுகவிற்கு பெரும்பான்மை

இந்த நிலையில் ஜெகஸ் கஸ்பர் தலைமையிலான குட்வில் கம்யூனிகேசன் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில்

சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 127 முதல் 139 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

அதிமுகவிற்கு 90 இடங்கள்

அதிமுகவிற்கு 90 இடங்கள்

அதிமுக கூட்டணிக்கு 81 முதல் 90 இடங்கள் கிடைக்கும் என்றும் மநகூ, பாமகவிற்கு 14 முதல் 17 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் குட்வில் கம்யூனிகேசன் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாத இதழ் கருத்துக்கணிப்பு

தமிழ் மாத இதழ் கருத்துக்கணிப்பு

விரைவில் வெளிவர உள்ள 'சும்மா படிங்க பாஸ்' என்ற தமிழ் மாத இதழ் தமிழகம் முழுவதும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளது. அந்த கருத்துக்கணிப்பில் 12,997 வாக்காளர்கள் பங்கேற்றனர். அதில் ஆண்கள்,7412 பேரும் பெண் வாக்காளர்கள் 5463 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 122 பேரும் பங்கேற்றனர். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

திமுக, அதிமுக வெல்லும் தொகுதிகள்

திமுக, அதிமுக வெல்லும் தொகுதிகள்

திமுக கூட்டணி சுமார் 95 தொகுதிகளில் இருந்து 127 தொகுதிகள் வரை பெரும், என்றும், அதிமுக கூட்டணி சுமார் 79 தொகுதிகளில் இருந்து 110 தொகுதிகளில் வெற்றி பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக கூட்டணி

தேமுதிக கூட்டணி

தேமுதிக-ம.ந.கூ.- தமாகா கூட்டணி சுமார் 7 தொகுதிகளில் இருந்து 30 தொகுதிகள் வரை பெரும் என்றும், பாமக கூட்டணி 2 முதல் 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பாஜக கூட்டணி 0 முதல் 2 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+