தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்கு பின்னணியில் ஒபிஎஸ்... திண்டுக்கல் சீனிவாசன் 'பகீர்'
தமிழ்நாட்டில் நடந்து வரும் போராட்டங்களுக்குப் பின்னணியில் ஓபிஎஸ் மற்றும் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம்: தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களின் பின்னணியில் ஒ.பன்னீர்செல்வம் இருக்கிறார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
சேலத்தில் வனவிலங்கள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் நடந்தது. அதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அக்கூட்டத்தில் இந்த கடும் கோடையில் வனவிலங்குகளுக்கு சிரமமின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன்,'' தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களின் பின்னணியில் ஓபிஎஸ்ஸும் மு.க ஸ்டாலினும் தான் இருக்கிறார்கள். மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் ஒபிஎஸ் பாடுபடுகிறார்'' என்று கூறினார்.
மேலும், ''தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும்போதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்'' என்று கூறியவர், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்துப்பேசும்போது,''எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம். ஆனால் பன்னீர் செல்வம் அணி தூங்குவது போல் நடிக்கிறார்கள்'' என கூறினார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக மக்கள் டாஸ்மாக்குக்கு எதிராக பெரும்பான்மையான பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டங்கள் அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள், தன்னெழுச்சியாக குடிக்கு எதிராக பொதுமக்களே போராடி வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு பின்னணியில் ஓபிஎஸ் இருக்கிறார் என திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டுவது ஒபிஎஸ் கோஷ்டியை வெறுப்பு மனநிலைக்கு இட்டுச் செல்வதற்கு கூறும் வார்த்தைகள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்











Click it and Unblock the Notifications