புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் சோளக்காட்டு பொம்மைகள்... ஓ.பன்னீர் செல்வம் விமர்சனம்
புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் சோளக்காட்டு பொம்மைகள் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை: புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் சோளக்காட்டு பொம்மைகள் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு உயிர் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் கட்சிகளை தொடங்கவுள்ளனர். இவர்களில் கமல் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி அரசியல் கட்சியை ராமநாதபுரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்குகிறார். இதுகுறித்து பலர் எதிர்மறையாகவே விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதேபோல் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் அணியினர் ரூ. 20 டோக்கன் கொடுத்தது உண்மைதான் என்று அவரது ஆதரவாளர் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், புதிய கட்சி தொடங்குகின்றனர் என்று யாரும் கவலைப்பட வேண்டாம். புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் சோளக்காட்டு பொம்மைகள், அதற்கு உயிர் இல்லை.
அதிமுகவை யாராலும் அசைக்க முடியாதபடி எஃகு கோட்டையாக ஜெயலலிதா வழங்கியுள்ளார். கண் அயர்ந்த நேரம் பார்த்து ரூ. 20 நோட்டை காண்பித்து ஏமாற்றி விட்டார்கள் என்றார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications