‘இரட்டை இலை சின்னம் எங்களுக்கே’… தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்த டெல்லி விரைகிறார் ஓபிஎஸ்
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் டெல்லி விரைகிறார்.
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்த தேர்தல் ஆணையரை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நாளை சந்திக்கிறார்.
சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதற்கான நோட்டீஸ் சசிகலாவிற்கு அனுப்பப்பட்டு அதற்கான பதிலையும் தேர்தல் ஆணையம் பெற்றது.

இந்நிலையில், இதற்கான பதில் நோட்டீசை தேர்தல் ஆணையம் ஓபிஎஸ்ஸுக்கு அனுப்பி இருந்தது. இதற்கான பதிலை 61 பக்கத்தில் ஓபிஎஸ் அணியினர் இன்று தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், நாளை ஓபிஎஸ் டெல்லி விரைகிறார். நாளை 12 மணியளவில் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை டெல்லி சென்று தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ள ஓபிஎஸ் சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவிக்குமாறு வலியுறுத்த உள்ளார்.
மேலும், வரும் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை அவருடன் எம்பி மைத்ரேயன் உள்ளிட்ட ஓபிஎஸ் எம்பிகள் செல்லவிருக்கின்றனர்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications