செட்டிநாடு அதிரசம் இப்ப உங்களுக்காக ஆன்லைனில்!

Subscribe to Oneindia Tamil

இனிப்புகள் இல்லாமல் தமிழர்கள், பண்டிகைகளை கொண்டாடுவதே இல்லை. அதுவும் அந்த இனிப்பு வகைகளில், அதிரசம் என்னும் ஒரு சுவையான, தட்டையான, உடலுக்கு சக்தி தர கூடிய ஒரு இனிப்பு இருந்தால்தான், அந்த இனிப்பு வகைகளுக்கு ஒரு வித கெளரவம்.

அதிரசம் என்பது தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் செய்யப்படும் சுவையான, சத்தான இனிப்பு பலகாரம். திருவிழா காலங்களில் விருந்தினர்களை உபசரிக்க இந்த இனிப்பு செய்வது வழக்கம். ஒருவாரம் வரை கெட்டுப்போகாது வைத்திருந்து சாப்பிடலாம். அதுவும் அதில் செட்டிநாடு அதிரசம் என்றால் அது ஒரு விதமான தனி ருசி. செட்டிநாடு உணவு வகைகளில் எல்லா தின்பண்டங்களிலும் ஒன்று காரம் அதிகமா இருக்கும், மற்றொன்று இனிப்பும் அதிகமா இருக்கும் அதற்க்கு ஒரு எடுத்துக்காட்டே இந்த செட்டிநாடு அதிரசம்.

Order Chettinadu Athirasam Online and get delivered in less than 24 Hours

செட்டிநாடு அதிரசம் சாமான்ய மக்களால் செய்ய முடியுமா ?

பெண்கள் தான் இனிப்பு பண்டங்கள் தயாரிப்பதில் கில்லாடி, அனால் அவர்களுக்கே சவால் விடும் அளவுக்கு இருப்பது இந்த செட்டிநாடு அதிரசம் தான். நாம் எவ்வளவுதான் பார்த்து பார்த்து செய்தாலும் எதாவது ஒரு குறை இந்த செட்டிநாடு அதிரசத்தில் இருக்கும். ஏனென்றால் இந்த செட்டிநாடு அதிரசம் என்பது ஒரு பாரம்பரிய தின்பண்டம். இதற்கென்று ஒரு வித தனி ருசி இருக்கும். அதை செட்டிநாடு அதிரசத்தை செய்வதை ஒரு கலையாக கொண்டவர்களுக்கு மட்டும் தான் அதை பதமாக மற்றும் பக்குவமாக செய்ய முடியும்

அரிசி மாவா அல்லது அதிரசம் தினையா?

சாதரணமாக செட்டிநாடு அதிரசத்தை, அதிரசம் திணையில் தான் செய்ய வேண்டும். அதற்கான காரணம் ? அதிரசம் திணையில் தான் நாம் எதிர்பார்க்கும், சுவை மற்றும் உடலுக்கு சக்தி தர கூடிய ஒரு சில விட்டமின்கள் இயற்கையாகவே இருக்கின்றன. ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் யாவரும் அரிசி மாவையே பயன்படுத்தி தான் அதிரசம் செய்கிறார்கள். ஆனால் அரிசியில் செய்தாலும் தினையை பயன்படுத்தி செய்தாலும் செய்முறை ஒன்றே.

செட்டிநாடு அதிரசம் செய்முறை:

தேவையான பொருட்கள்:

அரிசி - அரை கிலோ
வெல்லம் - 300 கிராம்
ஏலக்காய் சிறிதளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும். அதிக நேரம் காயக் கூடாது. சற்று ஈரமாக உள்ளபோதே பச்சரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லப்பாகினை பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கும்) பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும். பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும்.

மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும். ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது. தேவைப்படும் போது அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, எண்ணெய்யை ஒரு பேப்பரில் உறிஞ்சி எடுக்கவும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற சத்தான சுவையான இனிப்பு அதிரசம் தயார். சுவையான அதிரசத்தை எடுத்து அனைவருக்கும் பரிமாறவும்.

செட்டிநாடு அதிரசம் செய்யும் முறை என்பது ஒரு வித தனி கலை, அதை ஒரு சிலரால் மட்டுமே மிக செரியாக செய்ய முடியும். இந்த அதிரசத்தை செய்வதற்கு பொறுமை மிக மிக அவசியம். இப்போது இருக்கும் காலகட்டத்தில் எல்லோரும் துரித உணவையே விரும்புகிறார்கள். ஆகையால் பேக்கரி கடைகளில் விற்கப்படும் சுவை இல்லாத, உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசயங்களை கொண்டு செய்ய கூடிய அத்தகைய அதிரசத்தை எல்லோரும் தேடி பொய் வாங்குகிறார்கள்

இதை கருத்தில் கொண்டு, நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) உங்களுக்கு சுவையான மற்றும் உடலுக்கு சக்தி தர கூடிய திணை அதிரசத்தை கொண்டு செய்த மண்மணம் மாறாத செட்டிநாடு அதிரசத்தை உங்கள் வீடு தேடி வந்து தருகிறது. நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் உடனே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com).

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.

எலேய் ஒரு தடவ வாங்கி பாரு லே நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) லே, அப்பறம் வாங்கி கிட்டே இருப்பீங்க. எலேய் மிஸ் பண்ணிடாதீங்க அப்பறம் வருத்த்படுவீங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+