கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி- பெரம்பலூரில் பயங்கரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால், காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூரைச் சேர்ந்த மோகன் என்பவர் நேற்று முன் தினம் வனப்பகுதியில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மர்மமான முறையில் இறந்து கிடந்த மோகனின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:

பிரியாவிற்கும் மோகனிற்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது, இவர்களுக்கு தீபிகா,விஜயா என்று இரு மகள்கள் உள்ளனர். பிரியாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரைவிட 7 வயது குறைந்த ஆட்டோ டிரைவர் பிரபுவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் இதனை மோகன் கண்டித்துள்ளார்.

ஜாலியாக இருக்க முடியவில்லை

ஜாலியாக இருக்க முடியவில்லை

இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஜாலியாக இருப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்ல சதித் திட்டம் போட்டுள்ளார் பிரியா.

தொலைபேசியில் அழைத்த மனைவி

தொலைபேசியில் அழைத்த மனைவி

இதன்படி வேலைக்கு சென்ற மோகனை அவசர வேலையாக வெண்பாவூர் செல்ல வேண்டும் என்று போனில் தொடர்பு கொண்ட கூறியுள்ளார் பிரியா. இதனால் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து மனைவியை அழைத்துக் கொண்டு வெண்பாவூர் சென்றுள்ளார் மோகன்.

அரிவாளால் போட்டுத் தள்ளினார்

அரிவாளால் போட்டுத் தள்ளினார்

இருவரும் வேப்பந்தட்டை - வெண்பாவூர் இடையே உள்ள வனப்பகுதி அருகே சென்ற போது அங்கு மறைந்திரந்த பிரபு மோகனை வழிமறித்து தாக்கியுள்ளார். அப்போது உடனிருந்த மனைவி பிரியாவும் சேர்ந்து அரிவாளால் கழுத்து மற்றும் முகத்தில் மோகனை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

தப்பியோட்டம்

தப்பியோட்டம்

மோகன் உயிரிந்துவிட்டதை உறுதிசெய்த பிரியாவும், கள்ளக்காதலன் பிரபுவும் அந்த இடத்தை விட்டு தப்பியோடியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தக் கொலை குறித்து பிரபு மற்றும் பிரியாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Over illegal affair wife murdered husband with her illegal lover shocked Perambalur Venbaavur's villagers
Please Wait while comments are loading...